புதுச்சேரி சிறுமி கொலை: குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு...

குற்றவாளி கருணாஸ் - X
புதுச்சேரியில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில், கடந்த 2024 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி மாயமானார். பின்னர், நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் மூலம் அந்தச் சிறுமி அதே பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து புதுச்சேரி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட கருணாஸ் (வயது 20) என்ற இளைஞரும், விவேகானந்தன் என்ற முதியவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் உயிருடன் எஞ்சிய குற்றவாளி கருணாஸுக்கு கடந்த மே 8 ஆம் தேதி தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தூக்குத் தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு கூறுகையில், குற்றவாளி கருணாஸுக்கு எதிரான போக்ஸோ குற்றச்சாட்டுகளை காவல்துறையின் தரப்பில் நிரூபிக்கவில்லை எனவும், இந்தக் குற்றச்சாட்டில் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இந்த வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப். 30) தீர்ப்பளித்துள்ளது.
Summary
The Madras High Court has commuted the death sentence imposed on Karunasconvicted for the sexual assault and murder of a young girl in Puducherry to life imprisonment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






