ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்

அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது பற்றி...

Anbil Mahesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Published On :

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு , அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அ ரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, அன்பில் மகேஸின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்திய போலீசார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அரசகுமார் என்பவர் தனியாக அலுவலகம் அமைத்து பணம் வசூலித்துள்ளார். துறைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்தான். விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த மனு மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது எனவும் கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பும் எனத் தெரிவித்த நீதிபதி, இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது; வேண்டுமானால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறினார்.

மேலும், அன்பில் மகேஸ் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Summary

Rs. 100 crore fraud case: No interim relief to Anbil Magesh - High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.