தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ஆறு மாதங்களாக ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கம்?

குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி ரேஷன் பொருள்களை வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் உரிமைகளை நாளை முடக்கப்படுவது தொடர்பாக....

unused Ration cards for six months suspended...

ஆறு மாதங்களாக ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கம்? - கோப்புப்படம்

Published On :

கடந்த ஆறு மாதங்களாகத் தங்கள் குடும்ப (ரேஷன்) அட்டைகளைப் பயன்படுத்தி ரேஷன் பொருள்களை வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் உரிமைகளை நாளை (அக். 1) முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு உத்தரவின்படி, பொது விநியோகத் திட்டத்தின் (பிடிஎஸ்) தரவுத்தளத்தைச் சீரமைக்கவும், நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத, போலியான மற்றும் சந்தேகத்திற்குரிய பயனாளிகளை கண்டறிந்து நீக்குவதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 20.4 கோடி குடும்ப அட்டைகள் மூலம் தகுதியான மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கான மானிய விலை உணவு பொருள்களை, மாநில அரசுகளின் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 80.6 கோடி பேர் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விவரங்களை தொடர்ந்து சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய உணவுத் துறை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாகத் தங்களது குடும்ப (ரேஷன்) அட்டைகளைப் பயன்படுத்தாத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் உரிமைகளை நாளை அக்டோபர் முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனடியாக நீக்கப்படாது

இதன்மூலம், கடந்த ஆறு மாதங்களாக தங்களது குடும்ப அட்டைகளை பயன்படுத்தி ரேஷன் பொருள்களை வாங்காத பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படாது. முதலில் அவர்களின் குடும்ப அட்டைகள் தற்காலிகமாக முடக்கப்படும்; தாங்கள் உண்மையான பயனாளிகள் என்பதை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும்.

இந்தக் காலத்திற்குள் அவர்கள் 'இ-கேஒய்சி' செயல்முறையை முடித்தால், அவர்களின் அட்டைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்று மாத கால அவகாசம்

கடந்த ஆறு மாதங்களில் எந்தவித உணவு தானியப் பலன்களையும் பெறாத 'குடும்ப அட்டைகள்' என்று அழைக்கப்படுவது தொடர்பான அரசின் அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே இந்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

திருத்தப்பட்ட பொது விநியோகத் திட்ட (கட்டுப்பாட்டு) ஆணையின்படி, இத்தகைய அட்டைகளைத் தற்காலிகமாக முடக்கவும், அதைத் தொடர்ந்து கள ஆய்வு மற்றும் 'இ-கேஒய்சி' சரிபார்ப்பை மூன்று மாதங்களுக்குள் நடத்தி இறுதி முடிவை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தரவுத்தளச் சீரமைப்பு

இதன்மூலம் உண்மையான எழை எளிய பயனாளிகளுக்கு மட்டுமே மானிய விலை உணவுப் பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்வதுடன், போலியானவர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் மூலம் ஏற்படும் வீணாக்கம் மற்றும் முறைகேடுகளை குறைக்கவும் இத்தகைய தரவுத்தளச் சீரமைப்பு நடவடிக்கைகள் நடத்தப்படுகிறது.

பொது விநியோக அமைப்பு தரவுத்தளத்தை சீரமைக்க, அரசு இதற்கு முன்னர் டிஜிட்டல் மயமாக்கல், ஆதார் இணைப்பு மற்றும் இ-கேஒய்சி போன்ற முறைகளைப் பயன்படுத்தியுள்ளது.

கடந்த 2024 நவம்பர் மாதத்தில், தரவுத்தளத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளின் மூலம் சுமார் 5.8 கோடி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் மட்டுமே பயனடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்த செயல்முறை என தெரிவித்துள்ளது.

பொது விநியோக அமைப்பில் தொழில்நுட்பத்தின் மூலம் நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான மத்திய அரசின் திட்டம், அல்லது ஸ்மார்ட்-பிடிஎஸ் திட்டம், பொது விநியோக அமைப்பில் தொழில்நுட்பம் சார்ந்த விநியோகம் மற்றும் பயனாளர் சரிபார்ப்பை வலுப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது.

குடும்ப அட்டைத் தரவுத்தளத்தைப் பராமரிப்பதற்கான ஒரு மையக் கருவியாக இ-கேஒய்சி-யையும் அரசு ஊக்குவித்து வருகிறது.

உணவுத் துறையின்படி, கடந்த ஜூலை 30 ஆம் தேதி நிலவரப்படி, குடும்ப அட்டைகளுக்கான இ-கேஒய்சி பணிகள் 90.64% நிறைவடைந்துள்ளது. இ-கேஒய்சி அடிப்படையிலான தரவு நகலெடுத்தல் மற்றும் கைபேசி எண் இணைத்தல் ஆகியவற்றுக்கான புதிய நெறிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை குடும்ப அட்டைகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்பதை மத்திய உணவுத்துறை தெரிவிக்கவில்லை.

Summary

He said the default approach in a rights-based welfare programme should be inclusion rather than deletion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER