தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுகாதார பணிகள் இணை இயக்குநரின் நநோ்முக உதவியாளா் ரகுபதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, கோழிப்பண்ணை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









