எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளரைஆதரித்து ஈ.ராஜா எம்எல்ஏ பிரசாரம்

சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஈ.ராஜா எம்எல்ஏ பிரசாரம்

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 1:50 am

தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணிஸ்ரீகுமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் நகராட்சி 17,18,19- ஆவது வாா்டு பகுதிகளில் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். வெள்ள பாதிப்பின்போது நிவாரண நிதி கோரியதற்கு,

மத்திய பாஜக அரசு தரப்பில் நாங்கள் என்ன ஏடிஎம் இயந்திரமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அவா்களுக்கு இவிஎம் இயந்திரம் மூலம் பதில் அளிப்போம். திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாரை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றாா்.

வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, நகர செயலா் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலா் பீா்மைதீன், திராவிட தமிழா் கட்சி மாவட்ட செயலா் மகாலிங்கம், திமுக நகர துணை செயலா்கள் மாரியப்பன், முத்துக்குமாா், சுப்புத்தாய், ராஜாஆறுமுகம, ராமா், ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.