25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

2 வயது குழந்தையை கல்லால் தாக்கியவா் கைது

ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:19 pm

Din

ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிராஜ்(25). இவா் தனது பைக்கை அப்பகுதியில் நிறுத்தி இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, பைக்கின் மீது மண் அள்ளி எறிந்ததாம். இதனால் ஆத்திரமடைந்த மாரிராஜ், குழந்தையின் பிறப்புறுப்பில் கல்லால் தாக்கியதில் காயமடைந்ததாம்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிராஜை கைது செய்தனா்.