பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைக்கின்றனா் ராஜா எம்.எல்.ஏ., ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.
பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைக்கின்றனா் ராஜா எம்.எல்.ஏ., ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.

சங்கரன்கோவில் பணிமனைக்கு 2 புதிய பேருந்துகள்

Published on

சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனைக்கு வழங்கப்பட்ட 2 புதிய பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

இந்தப் பேருந்துகள் தற்காலிகமாக, ஸ்ரீவில்லிபுத்தூா்-திருநெல்வேலி வழித்தடத்தில் இயங்கவுள்ளன.

புதிய பேருந்துகள் தொடக்க விழா, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக கூட்டாண்மை வணிக துணை மேலாளா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி போக்குவரத்து துறை சட்ட உதவி மேலாளா் மாரியப்பன், சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளா் பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, தொமுச மண்டல அமைப்பு செயலாளா் மைக்கேல் நெல்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து பணிமனை தொமுச தலைவா் குருசாமிராஜ், செயலா் சங்கர்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, விவசாய அணி துணை அமைப்பாளா் ஸ்ரீகுமாா், நகர துணைச் செயலாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com