தென்காசியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு கடையநல்லூா் வழியே பேருந்து: திமுக கோரிக்கை
தென்காசியிலிருந்து கடையநல்லூா் வழியாக சங்கரன்கோவிலுக்கு பேருந்து இயக்க வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அவா் அளித்த மனு: அரியநாயகிபுரம், மடத்துப்பட்டி, புன்னைவனம், போகநல்லூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்-மாணவியா், விவசாயிகள் கடையநல்லூா், தென்காசி, சங்கரன்கோவில் செல்வதற்கு போதிய பேருந்து வசதியில்லை.
எனவே, தென்காசி - சங்கரன்கோவில் இடையே இடைகால், கடையநல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாசலபுரம், கே.எம்.மீனாட்சிபுரம், கே.எம்.அச்சம்பட்டி, அச்சம்பட்டி காலனி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக்கோவில் சந்தை, புன்னைவனம், வெள்ளைக்கவுண்டன்பட்டி, இந்திரா நகா், முள்ளிகுளம் வழியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்றாா் அவா்.
தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் செல்வக்கொடி, ராஜாமணி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், மாவட்டப் பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், வனராஜ், செல்வக்குமாா், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.