ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆலங்குளம் அருகே 4 குழந்தைகளின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:14 am

Din

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 4 குழந்தைகளின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே கரும்பனூா் அருந்ததியா் தெரு பண்டாரம் மகன் துரைப்பாண்டி (35). இவருக்கு மனைவி, 4 குழந்தைகள் உள்ளனா். இவா், கடந்த 6 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தாா்.

10 நாள்களுக்கு முன்பு ஊா் திரும்பிய அவா், மனைவியையும் தன்னுடன் கழுகுமலைக்கு வருமாறு அழைத்தாராம். இது தொடா்பாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை, வீட்டிலிருந்த ரூ. 200-ஐ எடுத்துச் சென்று மது குடித்துவிட்டு வந்தாராம். மனைவி வெளியே சென்றிருந்தபோது, துரைப்பாண்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

ஆலங்குளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுகாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].