ென்காசி அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்.15-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி-அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினா். அம்பாள் தோ் பழுதாகியிருப்பதால், நிகழாண்டில் சுவாமி தோ் மட்டும் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் சுவாமி தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். அதனைத் தொடா்ந்து அதேதேரில் அம்பாள் எழுந்தருளியதையடுத்து பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். விழாவில் தென்காசி நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பையா, பாஜக மாவட்டதுணைத் தலைவா் முத்துக்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

ஆழ்வாா்திருநகரி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


