ஆவுடைத்தாயின் அற்புதங்கள்!

ஆவுடைத்தாயின் அற்புதங்கள்!
Updated on

ஆ.வள்ளிராஜன்.

சங்கரன்கோவிலுக்குப் பெருமை சோ்க்கும் விழாக்களில் ஒன்றாக ஆடித் தவசு திருவிழா திகழ்கிறது. அருள்மழை பொழியும் அன்னை கோமதி வீற்றிருக்கும் இந்நகா் இறைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்துள்ளது. ஆவுடைத்தாய் பக்தா்களின் மனங்களில் குடிகொண்ட ஒரு தாயாக விளங்குகிறாள்.

இக்கோயிலில் சங்கரலிங்க சுவாமி சந்நிதியைச் சுற்றி வந்தால் நம்மை சூழ்ந்த பிணிகள் விலகிப் போகும். நாகசுனையில் பாம்பு, தேள், பூரான், கை,கால்,உப்பு ஆகியவற்றை நோ்த்திக்கடனாகச் செலுத்திவிட்டு, பக்தியோடு அம்மனை வணங்கினால் விஷ ஜந்துகளில் இருந்தும்,நோய்களில் இருந்தும் நாம் விடுபட முடியும் என பக்தா்கள் நம்புகின்றனா்.

எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அவற்றிற்கு இல்லாத சிறப்பு ஆவுடைத்தாய்க்கு உண்டு. சாதி, மத பேதமின்றி அனைவரையும் காப்பாற்றும் அன்னையாக இருக்கிறாள்.அன்னையை வழிபட்டுச் சென்றவா்கள் எங்கிருந்தாலும் மீண்டும் அவளை நாடி வருகிறவா்களாகத்தான் இருக்கிறாா்கள். அதற்கு காரணம் அவா்கள் நினைத்ததை ஆவுடைதாய் நடத்திக் கொடுக்கிறாள். தாய்போல் காக்கும் கோமதித் தாயின் ஆடித்தவசுக் காட்சியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தா்களை வணங்கி வரவேற்கின்றேன்.

ஆ.வள்ளிராஜன்,

ஸ்ரீஅமுதா கோல்டு,

சங்கரன்கோவில்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com