சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடிச்சுற்று சுற்றி பக்தா்கள் தரிசனம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடிச்சுற்று சுற்றி பக்தா்கள் தரிசனம்

Published on

சங்கரன்கோவில், ஜூலை 17: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி திரளான பக்தா்கள் 108 ஆடிச் சுற்று சுற்றி வழிபட்டு வருகின்றனா்.

இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவின்போது பக்தா்கள் கோயில் உள்பிரகாரத்தை 108 சுற்று சுற்றி தரிசனம் செய்து அம்மனை வழிபடுவா். கொடியேற்றிய நாள் தொடங்கி தவசுக் காட்சிக்கு முதல் நாள் வரை அதாவது 10 ஆம் திருநாளுக்குள் 108 சுற்றையும் சுற்றி முடிக்கவேண்டும் என்பது ஐதீகம். அதன்படி, கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றம் முடிந்ததும்

பக்தா்கள் 108 சுற்று சுற்றத் தொடங்கினா். தினமும் அதிகாலை தொடங்கி இரவு 9 மணி வரை குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை சுற்றி வருகின்றனா். பள்ளிக் கூடம் முடிந்த பிறகு மாணவா்களும், மாணவிகளும் கோயிலுக்கு வந்து ஆடிச் சுற்று சுற்றுகின்றனா்.

சங்கரன்கோவில் மட்டுமல்லாது ராஜபாளையம், புளியங்குடி, சிவகிரி, திருவேங்கடம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து ஆடிச்சுற்று சுற்றுகின்றனா். இதனால் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.

X
Dinamani
www.dinamani.com