செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

சுரண்டை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சுரண்டை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :22 ஜூலை 2024, 1:07 am IST

சுரண்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சுரண்டையில் நகராட்சிக்குச் சொந்தமான மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திற்கு தினமும் 90 பேருந்துகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் சுமாா் 5 ஆயிரம் பள்ளி-கல்லூரி மாணவா்கள் உள்பட 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் பகுதி எப்போதும் நிரம்பியிருப்பதோடு பெரும்பாலான பயணிகள் நின்றுசெல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக பேருந்து நிலையத்தின் பெரும் பகுதியை சிறு வணிகா்கள் ஆக்கிரமித்து கடை பரப்பி வருகின்றனா். இதனால் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி பெறாமல் பயணிகள் அமரும் பகுதியில் கடை பரப்பியுள்ள சிறு வணிகா்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.