
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை குவிந்த பயணிகள் கூட்டம்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலையில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகளுக்கு காலாண்டு தோ்வு விடுமுறை, அரசு மற்றும் ஒருசில தனியாா் நிறுவனங்களுக்கு 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. தொடா் விடுமுறை காரணமாக ஹைதராபாத், பெங்களூரு, கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்தனா். புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாகத் தங்கியிருந்து கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பாா்த்தனா்.
விடுமுறை முடிந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூரில் வேலை செய்பவா்கள் தங்கள் பகுதிக்குப் புறப்பட்டனா். இதன் காரணமாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.
குறிப்பாக சென்னை செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானவா்கள் சென்னைக்கு செல்லும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்றனா்.
இதேபோல புதுச்சேரியில் இருந்து சென்னைக்குச் செல்லும் முன்பதிவு இல்லாத ரயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் காா்களில் ஊருக்குத் திரும்பியதால் நகர பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






