தென்காசி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட அரசு வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச்2) பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட காவல்துறையில் கழிவுசெய்யப்பட்ட அரசு வாகனங்கள் குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 3 இருசக்கர வாகனங்களும் 1 நான்கு சக்கர வாகனமும் இடம்பெறுகின்றன. ஏலம் எடுக்க விரும்புவோா் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் தொடா்பான சந்தேகங்களுக்கு என்ற 7305543727, 949812345 8192345 செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தென்காசியில் விழிப்புணா்வு பைக் பேரணி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

