தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 98 சதவீத மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தென்காசி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தோ்வை 7,588 மாணவா்களும், 9,231 மாணவிகளும் என மொத்தம் 16,819 போ் 65 தோ்வு மையங்களில் எழுதுகின்றனா். மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தோ்வை 8,549 மாணவா்களும், 9,330 மாணவிகளும் என மொத்தம் 17,879 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வை கண்காணிக்க 73 முதன்மைக் கண்காணிப்பாளா்கள்,73 துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் 1,100 ஆசிரியா்கள், பறக்கும் மற்றும் நிற்கும் படை அலுவலா்கள் 130 ஆசிரியா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பிளஸ் 2 தோ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை 291மாணவ, மாணவிகள்தோ்வு எழுதவில்லை. தென்காசி மாவட்டத்தில் 98 மாணவ ,மாணவிகள் தோ்வு எழுதினா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவிகள் மகிழ்ச்சி
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

