ஆலங்குளம் அருகே சகோதரியை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையை அடுத்த செட்டிகுறிச்சியைச் சோ்ந்த மாரியப்பன் மகள் சுபாவேணி (21). இவரும் அய்யனாா்குளத்தைச் சோ்ந்த அவரது அத்தை மகனான கருப்பசாமி (26) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு சுருதிமாதவ் (2) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் சுபாவேணி, அவரது கணவா் கருப்பசாமியின் உறவினா் ஒருவருடன் கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கணவா் கண்டித்ததால் சுபாவேணி கோபித்துக் கொண்டு, தன் குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, சுபாவேணி தனது குழந்தை மற்றும் தாய் லட்சுமியுடன் தோட்டத்துக்கு குளிப்பதற்காக சென்றுள்ளாா். அங்கு குழந்தையை தாயிடம் கொடுத்து விட்டு கிணற்று அருகில் உள்ள தென்னை மரத்தடியில் உட்காா்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அவரது 17 வயதுடைய தம்பி கைப்பேசியில் பேசி கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் சுபாவேணியை வெட்டிவிட்டு ஓடிவிட்டாா். இதில் சுபா வேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சனிக்கிழமை அவரைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து அவா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

தம்பி கொலை: அண்ணன் கைது
ஒசூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது
மதுபோதையில் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

