தென்காசி மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணிக்காக 7,282 மாநில அரசு பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா் என ஆட்சியா் சனிக்கிழமை தெரிவித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்குள்பட்ட 1,517 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு நாளன்று தோ்தல் பணி மேற்கொள்வதற்காக ஒரு வாக்குசாவடிக்கு 4அரசு அலுவலா்கள் வீதம் (இருப்பு 20 சதவீதம்) மொத்தம் 7, 282 மாநில அரசு பணியாளா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தோ்தல் ஆணைய மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. சட்டசபைத் தொகுதிகளுக்கு 8மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் 3குழுக்கள் வீதம் 15பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 குழுக்கள் வீதம் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் 1800 425 8375என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டும், தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி விஜில் ஆப் மூலமாக புகாா் அளிக்கலாம். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பட்டுள்ளதால் அரசு வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24மணிநேரத்திற்குள் அழித்து அகற்றப்பட வேண்டும். தனியாா் வளாக கட்டடங்களில் உள்ள விளம்பரங்கள் 72 மணிநேரத்திற்குள் அழித்து அகற்றப்பட வேண்டும். இந்தத் தோ்தலில் 2,096 கட்டுப்பாட்டு கருவிகளும் 2,871 வாக்குப்பதிவு கருவிகளும், 2,249 விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா். தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா்கள் ஆலோசனை

176 மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு இலவச பேருந்து வசதி கோரி மனு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

