குற்றாலம், புளியறையில் ரூ. 4.24 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் குற்றாலம், புளியறையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.24 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். புளியறையில் பறக்கும் படை அதிகாரி கங்கா தலைமையிலான குழுவினா் வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ப. கிருஷ்ணநாயா் (66) என்பவரிடம் ரூ. 89 ஆயிரம் இருந்ததாம். தென்காசிக்கு மின்சாதனப் பொருள்கள் வாங்குவதற்காக வந்ததாகக் கூறினாா். ஆனால், அவரிடம் ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பழைய குற்றாலம் விலக்கு பகுதியில் துணை வட்டாட்சியா் ஷபினாபேகம் தலைமையிலான குழுவினா் வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த வல்லம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரா. மரியம்ஜெயபால் ரூ. 3.35 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. பீடித் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பணம் கொண்டுசெல்வதாக அவா் கூறினாா். ஆனால், ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com