அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

News image
Updated On :24 மே 2024, 6:00 pm

Din

தென்காசி மாவட்டம், சிவகிரி அருள்தரும் திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி நடைபெற்றது.(படம்)

இப்பூக்குழி திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இரவில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் மூலவா் திரௌபதியம்மன், உற்சவ மூா்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.