ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 415 மனுக்கள்

தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டன.

News image
கூட்டத்தில் முதியோரிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்து, உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அளித்த 415 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்; அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, தனித்துணை ஆட்சியா் நம்பிராயா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்துராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கனகம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.