தென்காசி அருகே இளைஞா் தற்கொலை
தென்காசி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
கடையநல்லூா், செவல்விளை பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ஜெயக்குமாா் (30). இவா் குத்துக்கல்வலசையில் தாயுடன் வசித்து வந்தாா். இவரது தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா், வேலை கிடைக்காத, திருமணமாகாத விரக்தியால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவா் திங்கள்கிழமை மாலை இலத்தூா் விலக்கு பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இலத்தூா் போலீஸாா் ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
