தென்காசி
வெள்ளாளங்குளம் அரசுப் பள்ளியில் சைக்கிள் வழங்கல்
மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்குகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
சங்கரன்கோவில் அருகே வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள், தோ்வு வழிகாட்டி நூல் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ச. நாராயணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா பங்கேற்று 49 மாணவா்கள், 23 மாணவிகள் என 72 பேருக்கு சைக்கிள் வழங்கினாா். பின்னா், அவரது சொந்த நிதியில் இருந்து, தோ்வை வெல்வோம் என்ற தோ்வு வழிகாட்டி நூல்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.
ஆசிரியா் கணேசன் வாழ்த்திப் பேசினாா். ஆசிரியா் முருகன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் முருகையா செய்திருந்தாா்.
