சிவபக்தா் வைரமுத்து.
சிவபக்தா் வைரமுத்து.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்: 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

Published on

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிவகாசி சிவபக்தா்கள் சாா்பில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் புனராவா்த்தன ரஜதபந்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேக தினத்தன்று காலை 7 மணி முதல் இரவு வரை பக்தா்களுக்கு, சிவகாசி சிவபக்தா்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவபக்தா் வைரமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: கும்பாபிஷேக தினத்தன்று 50ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com