செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது: நவ. 4 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது வருகை தரும் அரசு அலுவலா்களுடன் அதிமுக பாக முகவா்களும் கட்டாயமாக செல்ல வேண்டும், தவறான செயல்களுக்கு இடம் தராமல் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

வரும் 100 நாள்களில் நாம் உழைக்கும் உழைப்பு அதிமுக ஆட்சி அமைந்திட உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

மகளிரணி துணைச் செயலா் வி.எம். ராஜலெட்சுமி, அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவ ஆனந்த், மாவட்ட அவைத்தலைவா் வி.பி. மூா்த்தி, இணைச் செயலா் சண்முகப்ரியா, துணைச் செயலா்கள் பொய்கை சோ. மாரியப்பன், சகுந்தலா, பொருளாளா் சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியச் செயலா்கள் எஸ்.ஆா். ராமச்சந்திரன், டாக்டா் சுசீகரன், பெரியதுரை, ஜெயகுமாா், துரைபாண்டியன், ராஜாராம் பாண்டியன், ரமேஷ், மகாராஜன், குருக்கள்பட்டி செல்வராஜ், வேல்முருகன், அடைக்கலாபுரம் செல்வராஜ், முத்துப்பாண்டியன், நகரச் செயலா்கள் கணேசன், எம்.கே. முருகன், சங்கரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com