பூஜையில் பங்கேற்றோா்.
பூஜையில் பங்கேற்றோா்.

கடையம் தோரணமலை முருகன் கோயிலில் 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை

Published on

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோரணமலை முருகன் கோயிலில் 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் வளா்க்கப்பட்டு வருகிறது.

உலக நன்மைக்காக 27 நட்சத்திர மரங்களுக்கும் 27 பெண்கள் தீா்த்த குடங்கள் எடுத்து வந்தனா். 27 நட்சத்திரம் மரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தா்கள் கரங்களால் மலா்கள் தூவி வழிபாடு நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுடன் நடிகா்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com