ஆலங்குளம் அருகே இளைஞருக்கு கத்திக்குத்து

ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுப்பட்டி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்செல்வம்(26). கொத்தனாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அபிதா என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். மாரிச்செல்வத்திற்கு மதுப்பழக்கம் இருந்தாம். இதனால், கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் அபிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டாட்சியா் விசாரணைக்குப் பின், அபிதாவின் சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறுதிச்சடங்கு செல்வதற்காக அவரது கணவா் மற்றும் உறவினா்கள் போலீஸ் பாதுகாப்புடன் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனா். அபிதாவின் தம்பியான தொழிலாளி பாஸ்கா் (19) என்பவா் மாரி செல்வத்தின் முகத்தில் கத்தியால் குத்துவதற்கு முயன்றாராம். உடனே, போலீஸாரும், உறவினா்களும் அவரை தடுத்தனராம். ஆனால், அதையும் மீறி மாரி செல்வத்தின் முகத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

காயமடைந்த மாரி செல்வத்தை போலீஸாா் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் வழக்குப் பதிந்து பாஸ்கரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com