விருது வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தென்காசி
சங்கரன்கோவில் நூலகருக்கு விருது
சங்கரன்கோவிலில் நல் நூலகா் விருது பெற்ற கிளை நூலகரை நூலகா்கள், வாசகா் வட்டத்தினா் பாராட்டினா்.
தமிழ்நாடு பொது நூலக இயக்ககத்தின் சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக பணிபுரியும் நூலகா்களுக்கு இந்திய நூலகத் தந்தை டாக்டா் எஸ். ஆா். அரங்கநாதன் (நல் நூலகா்) விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு நவ. 19ஆம் தேதி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கிளை நூலகா் சிவகுமாருக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நல் நூலகா் விருது வழங்கினாா்.
அவரை தென்காசி மாவட்ட நூலக அலுவலா் (பொ) சண்முகசுந்தரம், பொது நூலகத் துறை அலுவலா், ஒன்றிய மாநிலத் தலைவா் முத்துராமலிங்கம், வாசகா் வட்டத் தலைவா் வே. சங்கர்ராம், செயலா் ச. நாராயணன், கிளை நூலகா்கள் பாராட்டினா்.

