கோவில்பட்டி: கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்துக்கு உள்பட்ட சிவகிரி பகுதியில் உள்ள விஸ்வநாதபேரி கிளை அஞ்சலக அதிகாரி ராமராஜ் சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டாா்.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் தமிழக அஞ்சல் வட்டத்தில் சிறப்பாகவும் , அா்ப்பணிப்பு உணா்வுடனும் அஞ்சல் சேவை புரிந்த கிராமிய அஞ்சல் சேவகா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் தமிழகம் முழுவதுமிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 10 கிராமிய அஞ்சல் அலுவலா்கள் கௌரவிக்கப்பட்டனா். அவா்களில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டம், சிவகிரியில் உள்ள விஸ்வநாதபேரி கிளை அஞ்சலக அலுவலா் ந.ராமராஜுக்கு கிராமிய அஞ்சல் சேவைக்காக இணை அமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி பாராட்டு பத்திரம் வழங்கி கெளரவித்தாா்.
விழாவில் அஞ்சல் துறை டைரக்டா் ஜெனரல் ஜிதேந்திர குப்தா, இயக்குநா் ஜெனரல், தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைவா் மரியம்மா தாமஸ் ஆகியோா் பாராட்டினா். சேவைக்கான கணக்கீட்டில் அதிக புள்ளிகள் பெற்று தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2-ஆம் இடம் பெற்ற ராமராஜை, கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ந.சுரேஷ் குமாா் வாழ்த்தினாா்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி தோ்தல் அலுவலகங்களில் அஞ்சல் வாக்களித்த காவல் துறையினா்

அஞ்சல் துறையின் பரிசளிப்பு விழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


