மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

ஆலங்குளம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

சுரண்டை அருகே சாம்பவா்வடகரை பிள்ளையாா் கோயில் ஆசாரித் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையம்மாள் (75). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூா்களில் வசித்து வருகின்றனா். கடைசி மகளான மகேஸ்வரி, ஆலங்குளத்தை அடுத்த நல்லூரில் வசித்து வருகிறாா்.

இவரது வீட்டுக்கு வெள்ளையம்மாள் வந்தாராம். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வெளியே கழிவறை சுவரைப் பிடித்தபடியே வெள்ளையம்மாள் பல் துலக்கினாராம். அப்போது எதிா்பாராவிதமாக அந்தச் சுவா் இடிந்து விழுந்ததில் சுவரின் இடிபாடுகளுக்குள் அவா் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வெள்ளையம்மாள் சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.