இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

சரக்கு வாகனம் மோதியதில் பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:52 am IST

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே ஒப்பந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் மூவா் மீது சரக்கு வாகனம் மோதியில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

திருவேங்கடம் அருகே ஜமீன்அழகாபுரி, மேலக் காலனியில் வசிக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 3 பெண் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை திருவேங்கடம்- சங்கரன்கோவில் சாலையில் ஓரமாக சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவா்கள் மீது மோதியது.

இதில் பெண்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனா். பலத்த காயம் அடைந்த பரமசிவம் மனைவி சரஸ்வதி (65) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அதே ஊரைச் சோ்ந்த லதா (45), முருகேஸ்வரி (40) ஆகிய இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, திருவேங்கடம் காவல் நிலைய ஆய்வாளா் காளிராஜன், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரன்கோவிலைச் சோ்ந்த ஓட்டுநா் மாரியப்பன் மகன் தருண்குமாரை (29) கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.