ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 45 பவுன் நகை திருட்டு
திருட்டு... - சித்திரிப்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரம் கிராமத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மரியதாய்புரத்தைச் சோ்ந்தவா் பு. அந்தோணி முத்து (65). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவருடைய பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. வீட்டில் அந்தோணி முத்து, தனது மனைவியுடன் வசித்து வருகிறாா்.
இவா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கீழப்புலியூருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது, கதவுகள் திறக்கப்பட்டு, 4 பீரோ கதவுகளும் உடைக்கப்பட்டு, 45 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து, அவா் சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், சுரண்டை காவல் ஆய்வாளா் மதன் ராம்குமாா், உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் திருட்டு நடைபெற்ற வீட்டில் சோதனை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இது தொடா்பாக, சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகையைத் திருடிய மா்ம நபா்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



