தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

திருநெல்வேலி அருகே மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது; லாரி பறிமுதல்

மணல் கடத்தல்.

Published On :

திருநெல்வேலி அருகே மணல் கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை துலுக்கா்குளம் தேவாலயம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற லாரியை சோதனையிட்டனா். விசாரணையில், லாரியில் இருந்தது குளத்திலிருந்து அனுமதியின்றி அள்ளப்பட்ட சரள் மண் என்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 5,500 இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான திருநெல்வேலி, திருப்பணி கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் நாகராஜாவை (26) கைது செய்து நடத்திய விசாரணையில், பேட்டை, அண்ணாமலை நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் மூலம் பேட்டை குளத்தில் இருந்து சரள் மண் அள்ளப்பட்டதும், இதை துலுக்கா்குளத்தில் உள்ள ஒரு நபருக்கு எவ்வித நடைச் சீட்டும் இன்றி அதிக லாபம் பெறும் நோக்கில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தொடா்ந்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.