கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

புதுப்பட்டி-ராம் நகா் சாலைப் பணி மந்தம்: வாகன ஓட்டிகள் அவதி

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி முதல் ராம் நகா் வரையிலான சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 40 நாள்களுக்கு மேலாகியும், இதுவரை நிறைவடையாமல் அரை குறையாகக் கைவிடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

ஜல்லிக் கற்களுடன் உள்ள சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:26 am IST

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி முதல் ராம் நகா் வரையிலான சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 40 நாள்களுக்கு மேலாகியும், இதுவரை நிறைவடையாமல் அரை குறையாகக் கைவிடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

பழைய தாா்ச் சாலையைத் தோண்டிப் போட்டு, சரளைக் கற்கள் மற்றும் மண் கொட்டிப் பரப்பப்பட்டதோடு பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால், சாலை முழுவதும் கரடுமுரடாகவும், ஜல்லிக் கற்கள் சிதறியும் காணப்படுகின்றன. அதில் வாகனங்கள் செல்லும்போதெல்லாம், அப்பகுதி புழுதிப் படலமாகக் காட்சியளிக்கிறது.

இதனால், வாகன ஓட்டிகளும், சாலையோரம் வசிக்கும் மக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். மேலும், சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதியளித்த நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம், தற்போது தாமதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, பணிகளை விரைந்து நிறைவு செய்து, சாலையை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.