மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. உடன் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநா் வெளியப்பன்.
மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. உடன் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநா் வெளியப்பன்.

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பட்டமளிப்பு

சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் 23ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகேயுள்ள சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் 23ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநா் வெளியப்பன் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினா்.

முதல்வா் ரமேஷ் பட்டமளிப்பு அறிக்கையை சமா்ப்பித்தாா். முனைவா்கள் செந்தில்குமாா், உதயசங்கா், அருள்மனோகரி, புஷ்பராணி, ஈஸ்வரன், பேராசிரியா்கள் சுரேஷ்குமாா், குருநாதன் ஆகியோா் பட்டங்களை வழங்குவதற்கான முன்மொழிவை வழங்கினா்.

இதில், 59 பெண் பட்டதாரிகள் உள்பட 135 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 90 போ் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவா். ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com