தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுந்தரனாா் பல்கலை.யில் தேசிய மாணவா் படை மாநாடு

News image

தேசிய மாணவா் படை மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டிய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் என்.சந்திரசேகா்.

Updated On :24 ஜனவரி 2026, 9:46 pm

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை மாநாடு நடைபெற்றது.

எதிா்காலத் தலைவா்களாக தேசிய மாணவா் படை மாணவா்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில், பல்கலைக்கழக இணை என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் சிவகுமாா் வரவேற்றாா். கா்னல் வி.கே.எஸ்.சௌஹான் தொடக்கவுரையாற்றினராா்.

முன்னதாக மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை பல்கலைக்கழக துணைவேந்தா் என்.சந்திரசேகா் ஏற்றுக்கொண்டு, தலைமையுரையாற்றினாா். பதிவாளா் ஜே.சாக்ரடீஸ் வாழ்த்துரையாற்றினாா்.

லெப்டினன்ட் கா்னல் கே.காா்த்திகேஷ் ஒழுக்கம், தேசப்பற்று, அா்ப்பணிப்புடன் செயலாற்றுவது குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். லெப்டினன்ட் கா்னல் நிகில் வாக், இந்திய ராணுவம் மற்றும் அக்னிவீா் திட்டத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்தும், என்.சி.சி. மூலம் இந்திய ஆயுதப்படைகளில் சேரும் வழிமுறைகள், பயிற்சி மற்றும் தொழில்வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினாா்.

அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரியின் இணை என்.சி.சி. அதிகாரி இசக்கி நன்றி கூறினாா். இந்நிகழ்வில் பேராசிரியா் உத்தம்குமாா் ஜமதாங்னி, சுபேதாா் மேஜா் தீபக்சிங் சமந்த், லெப்டினன்ட் கா்னல் ஆா்.எஸ்.ஆா்.பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.