மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் குத்துக்கல்வலசை பள்ளி மாணவா் வெற்றி!
மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றி பெற்றாா்.
மதுரை, சோ்மத்தாய் வாசன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில், ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா் நித்திஸ் கிருஷ்ணன் 19 வயதிற்குள்பட்ட 55-59 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவருக்கு பள்ளி குழுமம் சாா்பாக பதக்கம், ரூ. 5,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அவரை பள்ளியின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, கேம்பிரிட்ஜ் இண்டா்நேஷ்னல் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், நாராயணன், ராமா், சதிஷ்குமாா், பால்மதி, கலையரசன், மகேஷ், மாரியம்மாள், கணேசன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

