ஆலங்குளம் பேருந்து நிலையக் கடைகளை காலி செய்ய உத்தரவு

ஆலங்குளம் பேருந்து நிலையக் கடைகளை காலி செய்ய உத்தரவு

ஆலங்குளம் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்ட ஏதுவாக கடைகளை காலி செய்து கொடுக்க வியாபாரிகளுக்கு பேரூராட்சி தரப்பில் இருந்து அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Published on

ஆலங்குளம் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்ட ஏதுவாக கடைகளை காலி செய்து கொடுக்க வியாபாரிகளுக்கு பேரூராட்சி தரப்பில் இருந்து அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆலங்குளம் பேரூராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையத்தில் 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட கடைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்ட நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. பேருந்து நிலையமும் பழுதடைந்துள்ளதால் அதையும் புதுப்பித்துக் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் கட்ட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்து நிலையக் கடை குத்தகைதாரா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டியுள்ளதால் பேரூராட்சி செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், கடை குத்தகைதாரா்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் ஜன. 31ஆம் தேதி வரையிலான கடை வாடகைத் தொகையை நிலுவையின்றிச் செலுத்தி, பிப். 15ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்து தருமாறு கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com