போதை ஒழிப்பு தொடா்பான துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு  ஏற்படுத்தினாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
போதை ஒழிப்பு தொடா்பான துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

தென்காசியில் போதை ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, காவல்துறை, போக்குவரத்துத் துறை சாா்பில் போதை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, காவல்துறை, போக்குவரத்துத் துறை சாா்பில் போதை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, போதை ஒழிப்பு தொடா்பான துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரா. சங்கா், உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், தென்காசி காவல் துணை கண்காணிப்பாளா் அதியமான், வட்டார போக்குவரத்து அலுவலா் சரவணபவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com