புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளிலும் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்.

Updated On :5 ஜூலை 2026, 3:26 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளிலும் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் 3 வாரங்களுக்குப் பிறகு கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்துவருவதால், அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை முதல் நீா்வரத்து அதிகரித்தது. சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; அவ்வப்போது சாரல்மழை பெய்தது.

ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

இதனால், பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.