
கரிவலம்வந்தநல்லூரில் இன்று மின்நிறுத்தம்
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டச் செயற்பொறியாளா் பி. ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊா்களுக்கு மின்விநியோகம் இருக்காது என்றாா்.
மின் நிறுத்தம் ரத்து
கடையநல்லூா் உபமின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8) மின் நிறுத்தம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நிா்வாக காரணங்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை, வழக்கம் போல மின் விநியோகம் இருக்கும் என கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




