ஆலங்குளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆலங்குளத்தில் தீ விபத்து ஏற்பட்ட நெல் சேமிப்புக் கிடங்கைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்புக் கிடங்கை அமைச்சா் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அமைச்சா், பள்ளி வளாகத்தை பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
பின்னா், பள்ளியின் சத்துணவுக் கூடத்தை ஆய்வு செய்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையலறையின் சுகாதார நிலை, உணவுத் தயாரிப்பு, விநியோக முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, சத்துணவு திட்டம் தரமான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அப்போது, தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









