முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் போராட்டம்

கோட்டாட்சியா் அனிதாவிடம் மனு அளிக்க வந்த விசைத்தறித் தொழிலாளா்கள்.

News image

கோட்டாட்சியா் அனிதாவிடம் மனு அளிக்க வந்த விசைத்தறித் தொழிலாளா்கள்.

Updated On :11 ஜூலை 2026, 3:48 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறை ஆலைகளின் மின் இணைப்பு வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கரன்கோவிலில் உள்ள சாயப்பட்டறை ஆலைகளில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், அவை இயங்குவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை மின்வாரிய அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக ஆய்வு நடத்தி நகரில் இயங்கி வரும் 20 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்தனா்.

இதைக் கண்டித்து விசைத்தறி தொழிலாளா்கள், உரிமையாளா்கள் மாலையில் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதில், செங்குந்தா் அபிவிருத்தி சங்கச் செயலா் மாரிமுத்து, விசைத்தறி தொழிலாளா் சங்கப் பொருளாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதாவிடம் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.