தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தலையை துண்டித்து இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வலசையை சோ்ந்தவா் மா. மகேந்திரன் (30) இவா், கடந்த 6ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற பின் திரும்பிவரவில்லை. இதுதொடா்பாக அவரது மனைவி புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில், சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், மகேந்திரனை மேலக்கடையநல்லூா் பகுதியைச் கிருஷ்ணன் மற்றும் 3 சிறுவா்கள் சோ்ந்து தலையைத் துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதில், 3 சிறுவா்களையும் போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணனை புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஓரினை சோ்க்கைக்கு வற்புறுத்திய விவகாரத்தில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்தில் பயணியிடம் திருடியவா் கைது

மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது
இளைஞா் கொலை: மேலும் இருவா் கைது
கடையநல்லூா் பகுதியில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



