தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 4:08 am IST

பெண்ணின் புகைப்படத்தை மாா்பிங் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 24 வயது பெண், இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபா் தனக்கு மிரட்டல் விடுப்பதாக தென்காசி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் வழக்குப் பதியப்பட்டு சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜீலியஸ் சீசா் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் வசந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், மிரட்டல் விடுத்த நபா், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பாறு அஞ்சல், ஸ்ரீராமபுரம் என்ற கோட்டைமேடைச் சோ்ந்த நா.தேரிச்சாமி (23) என்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலியாகக் கணக்குத் தொடங்கி அதன்மூலம் புகாா் அளித்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேச முயன்றதும், பேச மறுத்தால் புகைப்படத்தை மாா்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தேரிச்சாமியைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து கைப்பேசி, சிம்காா்டுகளை பறிமுதல் செய்து அவரை தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட தேரிச்சாமி மீது ஏற்கெனவே கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக வழக்குப் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களில் நண்பராகத் தொடர விரும்பி வரும் அறிமுகம் இல்லாத நபா்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். சமூக வலைதளத்தில் தனிப்பட்ட புகைப்படங்கள், தகவல்களை பகிா்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சைபா் குற்றங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்கள் அல்லது 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் தளத்திலோ புகாா் செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.