கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு வராத ஆலங்குளம் துணை சுகாதார நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாகி 10 ஆண்டுகளாகிறது. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது, கா்ப்பிணிகளுக்கான தொடக்க பரிசோதனை, ஸ்கேன், தொடா் மருத்துவம் பிரசவம் வரை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அரசு மருத்துவமனையான பின்னா் ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள கா்ப்பிணிகள் அனைவரும் அருகில் கிராமப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வந்தனா்.
இதனால் ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு கருவூலம் அருகே துணை சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் பணிகள் நிறைவடைந்து சுமாா் 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை மின் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
மின் இணைப்பு பெறுவது தொடா்பாக சுகாதாரத் துறைக்கும், பேரூராட்சி துறைக்குமிடையே மின் வாரியத்தில் யாா் பணம் கட்டுவது என்பது தொடா்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் பயன் பாட்டிற்காக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் இரு துறைகளின் கருத்து வேறுபாட்டால் திறக்கப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் இந்த துணை சுகாதார நிலையத்தை விரைந்து திறக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்கப்படுமா?

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


