சங்கரன்கோவிலில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி


சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கவிஞா் சல்மா எம்.பி., தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா். பின்னா், ரூ. 600 மதிப்பிலான மளிகைப் பொருள்கள், ரூ. 200 ரொக்கம் அடங்கிய ரம்ஜான் தொகுப்பை 2,100 பயனாளிகளுக்கு வழங்கினா்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ச. தங்கவேலு, மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் செண்பக விநாயகம், ஜமாஅத் தலைவா் அப்துல் காதா், பொருளாளா் அப்பாஸ், தலைமை இமாம் முகம்மது ரபிக், மாவட்ட அவைத் தலைவா் கோ. சுப்பையா, மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்டப் பிரதிநிதி செய்யது அலி, ஒன்றியச் செயலா் பெரியதுரை, நகரச் செயலா் பிரகாஷ், துணைச் செயலா் சுப்புத்தாய், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, மதிமுக மாவட்ட இளைஞரணி முகமது ஹக்கீம், தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினா் அயூப்கான், நகரச் செயலா் செந்தில், தமுமுக இமாம் காசிம், இஸ்மாயில், விசிக பீா்மைதீன், முஸ்லிம் லீக் இலியாஸ், சுற்றுசூழல் அணி ஜலால், இளைஞரணி ஜான்சன், ஜெயக்குமாா், பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...