தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாவூா்சத்திரம் ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கீழப்புலியூா் வீரமாமுனிவா் ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி, தென்காசி காட்டுபாவா நடுநிலைப் பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தோ்தல் பணிக்கு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், எடை, உயரம் மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


