பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை

News image

கலைகதிரவன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்த மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள்

Updated On :20 மே 2026, 3:25 am IST

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கலைகதிரவனிடம் மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவா் அபாபீல் மைதீன், மாவட்டத் தலைவா் நைனாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம் அளித்த மனு: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தென்காசி நகரில் அதிகமாக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனா். மக்களின் நீண்ட நாள்களின் கோரிக்கையான இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கு பொது அடக்க ஸ்தலம் அமைத்துதர வேண்டும்.

புலிக்குட்டி விநாயகா் கோயில் தெரு, அக்பா் நகா், ஜமால் நகா், அஹது பள்ளி தெரு ஆகிய பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கழிவுநீா் ஓடை, தாா் சாலை, தெருவிளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

தென்காசி சிற்றாறை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். தாமிரவருணி கூட்டு குடிநீா் அலகு-2 திட்டத்தில் தென்காசி நகரப் பகுதிகளில் பெரிய குழாய் பதிக்கும் பணியை மக்களுக்கு இடையூறு இன்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் மாணவா்கள் பயன்படும் வகையில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றாலம், பழைய குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள், கடை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென்காசி நான்குவழிச் சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். புளியறை வழியாக எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது.

திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் ஆகியோா் உடனிருந்தனா்.