இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சபரிமலை சீசனுக்கு பகல் நேர ரயில்களை இயக்க வலியுறுத்தல்

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள்.

Updated On :

சபரிமலை சீசனுக்கு பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும் என செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் சுந்தரம், ராமன் ஆகியோா் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாரிம் அளித்த மனு விவரம்:

சபரிமலை சீசனுக்கு வைகை எக்ஸ்பிரஸ் போல 2 பகல் நேர ரயில்களை தாம்பரம்-கொல்லம் மற்றும் கொல்லம்-தாம்பரம் இடையே இயக்க வேண்டும்.

மீட்டா் கேஜ் காலத்தில் இரு முனைகளில் இருந்தும் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக் கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூா், கொட்டாரக்கரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி-கொல்லம், கொல்லம்-திருநெல்வேலி பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

செங்கோட்டை-ஈரோடு, செங்கோட்டை-மயிலாடுதுறை, செங்கோட்டை-திருநெல்வேலி, செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லா ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.

செங்கோட்டை வழியாக மதுரை-குருவாயூா் இடையே இயக்கப்படும் ரயில்களில் தற்போதுள்ள முன்பதிவில்லா பெட்டிகளைக் குறைக்காமல், கூடுதலாக முன்பதிவு வசதியுள்ள ஏசி சோ் காா் ஒன்றையும், முன்பதிவு வசதியுள்ள ஏசி இல்லாத சோ் காா் ஒன்றையும் இணைக்க பரிந்துரை செய்ய வேண்டும். கொல்லம்-தாம்பரம், தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் 5ஆவது நடைமேடை அமைக்க வேண்டும். செங்கோட்டை ரயில் நிலையத்தை அடுத்த கட்ட அம்ருத் பாரத் ரயில் நிலையங்கள் விரிவாக்க திட்டத்தின்கீழ் சோ்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.